Wednesday, 18 March 2015

TIIC - Special schemes ;தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் -சிறப்பு திட்டங்கள்-II

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) சிறப்பு திட்டங்கள்:-II






தொழில் முனைவோருக்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அளிக்கும் சிறப்பு திட்டங்கள்:

1.பொதுவான காலக் கடன்

2.குறு மற்றும் சிறு தொழில்களுக்கான திட்டம்

3.போக்குவரத்து வாகனக் கடன் திட்டம்

4.கருவிகள் வாங்க கடன் உதவி திட்டம்

5.மின்னாக்கிகள் வாங்குவதற்கான திட்டம்

http://eigthbrain.blogspot.in/

நேற்றைய தொடர்ச்சி.........
6.காற்றாலை திட்டம்

7.தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டம்

8.நவீன அரிசி ஆலைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கான நடைமுறை
    மூலதனத் திட்டம்.

9. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம்.

10.பட்டியல் நிதியுதவி திட்டம்

11.குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு
    (TIIC)வாங்கும் கடன் -3%

ஒவ்வொரு திட்டத்தினை பற்றி விரிவாக நாளை காண்போம்.

மேலும் சில பயனுள்ள விபரங்கள் தெரிந்து கொள்ள கீழுள்ள ப்ளாக்குகளுக்கு சென்று பயன்பெறவும்.
                                       நன்றி ,வணக்கம்.ஜெய்ஹிந்த்.


http://eigthbrain.blogspot.in/

Tuesday, 17 March 2015

TIIC - Special schemes ;தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் -சிறப்பு திட்டங்கள்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) சிறப்பு திட்டங்கள்:



    தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (TIIC-TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION) ,மாநிலத்திலுள்ள குறு,சிறு,நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கும் மற்றும் சேவை நிறுவன்ங்களுக்கும் நிதியுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இயங்கி வருகிறது,நிதியுதவி அளிப்பதோடு அல்லாமல் முக்கியமாக முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துகிறது.
தொழில் முனைவோருக்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அளிக்கும் சிறப்பு திட்டங்கள்:
1.பொதுவான காலக் கடன்
2.குறு மற்றும் சிறு தொழில்களுக்கான திட்டம்
3.போக்குவரத்து வாகனக் கடன் திட்டம்
4.கருவிகள் வாங்க கடன் உதவி திட்டம்

5.மின்னாக்கிகள் வாங்குவதற்கான திட்டம்
        மன்னிக்கவும், தற்போதைய நேரமின்மையால் மேலும் சில சிறப்பு திட்டங்களை பற்றி நாளை காண்போம்.
மேலும் சில பயனுள்ள விபரங்கள் தெரிந்து கொள்ள கீழுள்ள ப்ளாக்குகளுக்கு சென்று பயன்பெறவும்.

                 நன்றி ,வணக்கம்.ஜெய்ஹிந்த்.


http://eigthbrain.blogspot.in/


Monday, 16 March 2015

இந்தியாவில் இனி முன் தேதியிட்ட வரி விதிப்பு முறை இருக்காது -அமிதாப் காந்த் IAS ;Amitabh kant IAS





இந்தியாவில் இனி முன் தேதியிட்ட வரி விதிப்பு முறை இருக்காது என்று மத்திய தொழில் கொள்கை மேம்பாட்டுத் துறையின் செயலர்(DIPP-Department of Industrial Policy and Promotion) அமிதாப் காந்த் IAS தெரிவித்தார். 



வோடபோன் வரி விதிப்பு பிரச்சினையில் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என அரசு தெரிவித்ததிலிருந்தே அரசின் நிலைப்பாடு தெளிவாகிவிட்டது. நிறுவனங்களை வதைக்கும் வரி விதிப்பு முறையை இந்த அரசு ஒரு போதும் ஏற்காது என்பது தெளிவுபட புலனாகிவிட்டது. முன்பிருந்த வரி விதிப்பு முறைகள் அனைத்தும் வழக்கொழிந்து போகும் என்று அவர் குறிப்பிட்டார்.
தனது துறையும் தொழில் துறையினருடன் மிகவும் சுமூகமான போக்கை மேற்கொள்ளும் என்று அவர் சுட்டிக் காட்டினார். வரி விதிப்பு முறையில் ஸ்திரமான அதேசமயம் வெளிப்படையான கொள்கைகளை வகுக்க அரசு முயற்சித்து வருவதாக அவர் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் வோட போன் நிறுவனம் மீதான ரூ. 3,200 கோடி வரி விதிப்பு தொடர்பான வழக்கில் அந்நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதிலும் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதில்லை என மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
இந்தியா இப்போது அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. இத்தகைய சூழலில் தொழில் துறையைப் பாதிக்கும் எத்தகைய வரி விதிப்புகளையும் அரசு நிச்சயம் முன்னெடுத்து செல்லாது என்று அவர் உறுதி படக் கூறினார்.



'Chinese Manufacturing Zone' in Uttar Pradesh --ASSOCHAM PROPOSAL:-----TO READ THIS ARTICLE CLICK @ http://thiyasexports.blogspot.in/




தொழில் முனைவோர்க்கு கடனுதவி-மகிளா வங்கியின் புதிய திட்டம்:-,






தொழில் முனைவோர்க்கு கடனுதவி-மகிளா வங்கியின் புதிய திட்டம்:-,
தொழில் முனைவோர்க்கான கடனுதவியை பாரதிய யுவசக்தி டிரட்ஸ்டும், பாரதிய மகிளா வங்கியும் இணைந்து வழங்கவுள்ளது.பதினெட்டு முதல் முப்படத்தைந்து வயது வரை உள்ள
சிறுபான்மையினர்,பெண்கள்,மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.அவரவர் தேவையை பொறுத்து ரூ.50 இலட்சம் வரை கடனுதவி அளிக்கப்படும்.
இச்செய்தியை பாரதிய யுவசக்தி டிரஸ்டின் நிர்வாக பொறுப்பாளர் லட்சுமி வெங்கடேசும்,பாரதிய மகிளா வங்கியின் தலைவர் உஷா அனந்த சுப்ரமனியனும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு http://eigthbrain.blogspot.in/

AVAILABLE FOR SALE: BRASS BUDDHA IDOL
CLICK  @ http://thiyasexports.blogspot.in/2015/03/brass-buddha-idoltebmb1.html

Sunday, 15 March 2015

தொழில் முனைவோருக்கான தேவையான மூன்று பண்புகள்:ENTREPRENUER JIM BEACH







தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு-ஜிம் பீச் உரையாடல்
    அமெரிக்காவில் புதிய தொழில் முனைவோரை திறமை மிக்கவர்களாக ஆக்கும் நோக்கில் ஸ்கூல் ஃபார் ஸ்டார்ட் அப்ஸ் என்ற பயிற்சி நிறுவனத்தை துவக்கி இருக்கிறார்கள் . இதன் நிறுவனர் மற்றும் துறைத் தலைவர் ஜிம் பீச்.
தொழில் முனைவோருக்கான பயிற்சி கருத்தரங்கில் ஜிம் பீச் எழுப்பிய கேள்வி இது:
 ஒரு தொழில் முனைவோருக்கான அத்தியாவசிய தேவையான மூன்று பண்புகள் என்னென்ன?
1.படைப்பாற்றல்
2.இடர்களை எதிர்கொள்ளும் துணிச்சல்,
3.எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்கிற வெறி ,
சரி தானா? என கேட்டு நிறுத்துகிறார்.
பயிற்சிக்கு வந்தவர்கள் ஆமாம்,ஆமாம்... மிக மிகச் சரி என்று குரல் கொடுக்கிறார்கள். ஜிம் பீச் இல்லவே இல்லை என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்.மேலும்,நீங்கள் அனைவரும் கூறுவது நூற்றுக்கு நூறு தவறான கருத்து என்று கூறிய போது, அனைவரும் திகைத்துப் போகிறார்கள் .
ஜிம் பீச் மேலும் தொடர்கிறார்.உங்கள் இருக்கையில் வசதியாக சாய்ந்து கொண்டு ஏதாவது ஒரு பெரிய யோசனை உதிக்கும் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்காதீர்கள்.வேறு யாராவது ஒரு நல்ல யோசனை வைத்து கொண்டு இருக்கக் கூடும்.அத்தகைய யோசனையைக் கண்டுபிடியுங்கள்,தவறு செய்கிறோம் என்கிற குற்ற உணர்ச்சி கூடத்தேவையில்லை. அந்த  யோசனையை திருடி உங்களுடையதாக ஆக்கி கொண்டாலும் தவறில்லை என்பேன். அந்த  யோசனையை மேலும்
செம்மைப்படுத்துவதில் தான் உங்கள் திறமை அடங்கி இருக்கிறது.நான் அப்படி தான் செய்தேன்,வெற்றி பெற்றேன் என்கிறார்.

        நீங்கள் இடர்களை எதிர் கொள்ள வேண்டிய தேவையே இருக்காது.இடர்களை குறித்து கவலைப்படுவது முட்டாள்தனம்.எத்தனையோ பேர் பணத்தை மூட்டை கட்டி வைத்து கொண்டு, எந்த தொழிலில் முதலீடு செய்யலாம் என்று காத்துகொண்டு இருக்கிறார்கள்.உங்களுக்காக அவர்களே இடர்களை  எதிர் கொள்ள தயாராக இருக்கும் போது ,நீங்கள் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்?.
      அப்புறம் அந்த வெறி வேண்டாம்.அது உங்கள் குடும்பத்தை முன்னேற்றுவதற்காக ஆனதாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்,போதும்.
தொழில் முனைவு என்பது என்ன தெரியுமா?
     உங்களுக்கு ஏதாவது சிக்கல் இருக்கிறதா? என்னிடம் விடுங்கள் .நான் அதை தீர்த்து வைக்கிறேன் என்று போய் நிற்பதுதான்.
  ஒரு மின் ஏணியில் இறங்கி கொண்டு இருக்கிறீர்கள்.அது தரை தளத்தை அடைவதற்குள் உங்கள் மூளைக்குள் ஒரு கேள்வி பளிச்சிட வேண்டும்.வெளியில் காலை எடுத்து வைக்கும் முன்  அதற்கான தீர்வை யோசித்துவிட வேண்டும்.இது தான் உங்களுக்கு சரியான வாய்ப்பு என்கிறார்  ஜிம் பீச்.

மேலும் தகவல்களுக்கு http://eigthbrain.blogspot.in/

---நன்றி,வளர்தொழில்,நித்யா கணேசன்,திண்டுக்கல்

Exports key to success of 'Make in India' initiative: Minister Nirmala Sitharaman,CLICK  @




About TIN NUMBER :TIN நம்பர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

TIN  (TAX -PAYER IDENTIFICATION ):
புதிதாக தொழில் தொடங்குபவர்கள் TIN நம்பர் பற்றி தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.
தொழில் தொடங்கி நடத்துபவர்களுக்கு TIN நம்பரின் முக்கியத்துவம் நன்றாக தெரியும் .இப்போது TIN நம்பர் பற்றி காண்போம்.
# TIN நம்பர் என்பது TAX -PAYER IDENTIFICATION ஆகும்.இது ஒரு 11 இலக்க எண்ணாகும்.முதல் இரண்டு இலக்கங்கள் அரசாங்க இலக்காகும்.அடுத்து வரும் ஒன்பது இலக்கங்கள் மாறக்கூடியது.
‪#‎இதனை‬ எங்கு வாங்க வேண்டும்?
ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும் ,மாவட்ட வணிக வரி மையத்தில் ,அதாவது District commercial tax dept இல் மனு செய்ய வேண்டும் .
# தொழிலில் TIN நம்பர் எவ்வாறு பயன்படுகிறது?
1.தமிழகம் மட்டுமல்லாது ,இந்தியா முழுவதும் தொழில் செய்ய பொருந்தக்கூடியதாகும்.
2.TIN நம்பர் ,பதிவு செய்யப்பட்ட முகவர்களை அடையாளம் காண உதவ பயன்படுகிறது.
3.வருமான வரி அமைப்பின் கீழ் உள்ள PAN CARD போல செயல்பட கூடியவை .
# TIN நம்பர் பெற தேவையான் ஆவணங்கள்:
1. ரேஷன் கார்டு நகல்.
2 .நமது புகைப்படம்.
3. PAN கார்டு நகல் -PROPRIETOR
4. சொத்து சம்பந்தப்பட்ட ஆவண நகல்
5. வாடகை ஒப்பந்த பத்திரம் நகல்
6. FORM F,FORM A பூர்த்தி செய்ய வேண்டும்
7. ரூ.500 க்கு DD எடுக்க வேண்டும்
8.ஏற்கனவே TIN NO உள்ளவர்கள் பரிந்துரை கடிதம் 2 வேண்டும்

DGFT: Only Three Documents needed for exports and imports,

CLICK @ http://thiyasexports.blogspot.in/2015/03/dgft-only-three-documents-needed-for.html


மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000 /- நிதி வழங்குதல்






அரசு பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி அரசாணை எண் 39
பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பா திக்கப்டுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000 /- நிதி வழங்குத ல்- ஆணை வெளியிடப் படுகிற து.
பள்ளிக் கல்வி ( இ2 ) துறை
அரசு ஆணை ( நிலை ) எ ண். 39 நாஷீமீ 30.3.2005 .
படிக்க :
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 24 . 3 . 2005 அன்று மாண்புமிகு தமிழக
முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிக்கை .
- - -
ஆணை :
ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே £, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிற து. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையி ல், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெளிணிதிடும்
வகையி ல், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்ப டி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது
நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000/- நிதி வழங்கப்படும். இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ,
மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.
2. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான அறிவுரைகள் தனியாக
வெளியிடப்படும்.
3. இவ்வரசாணை நிதித் துறையின் அ.சா.எண்.1061/ திஷி / றி /2005
நாள் 30.3.2005-ன் இசைவுடன் வெளியிடப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
கு.ஞானதேசிகன்,
அரசு செயலாளர்.
பெறுநர்
பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை 6
தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை 6
மெட்ரிக்குலேக்ஷன் பள்ளிகள் இயக்குநர், சென்னை 6
மாநில கணக்காயர், சென்னை 18
மாநில கணக்காயர், சென்னை 35
கருவூல கணக்கு ஆணையர், சென்னை 15
நகல்
மாண்புமிகு முதலமைச்சரின் அலுவலகம், சென்னை 9
மாண்புமிகு கல்வி மற்றும் வணிகவரித் துறை அமைச்சரின்
சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை 9.
/ஆணைப்படி அனுப்பப்படுகிறது/

Deoghar: Politics of Short-cut Leads to Short-circuit, Says PM Modi in Jibe at Opposition

  Taking a swipe at opposition parties, Prime Minister  Narendra Modi  on Tuesday cautioned against taking “short-cut” politics based on pop...