Sunday, 15 March 2015

மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000 /- நிதி வழங்குதல்






அரசு பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி அரசாணை எண் 39
பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பா திக்கப்டுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000 /- நிதி வழங்குத ல்- ஆணை வெளியிடப் படுகிற து.
பள்ளிக் கல்வி ( இ2 ) துறை
அரசு ஆணை ( நிலை ) எ ண். 39 நாஷீமீ 30.3.2005 .
படிக்க :
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 24 . 3 . 2005 அன்று மாண்புமிகு தமிழக
முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிக்கை .
- - -
ஆணை :
ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே £, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிற து. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையி ல், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெளிணிதிடும்
வகையி ல், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்ப டி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது
நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000/- நிதி வழங்கப்படும். இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ,
மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.
2. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான அறிவுரைகள் தனியாக
வெளியிடப்படும்.
3. இவ்வரசாணை நிதித் துறையின் அ.சா.எண்.1061/ திஷி / றி /2005
நாள் 30.3.2005-ன் இசைவுடன் வெளியிடப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
கு.ஞானதேசிகன்,
அரசு செயலாளர்.
பெறுநர்
பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை 6
தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை 6
மெட்ரிக்குலேக்ஷன் பள்ளிகள் இயக்குநர், சென்னை 6
மாநில கணக்காயர், சென்னை 18
மாநில கணக்காயர், சென்னை 35
கருவூல கணக்கு ஆணையர், சென்னை 15
நகல்
மாண்புமிகு முதலமைச்சரின் அலுவலகம், சென்னை 9
மாண்புமிகு கல்வி மற்றும் வணிகவரித் துறை அமைச்சரின்
சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை 9.
/ஆணைப்படி அனுப்பப்படுகிறது/

No comments:

Deoghar: Politics of Short-cut Leads to Short-circuit, Says PM Modi in Jibe at Opposition

  Taking a swipe at opposition parties, Prime Minister  Narendra Modi  on Tuesday cautioned against taking “short-cut” politics based on pop...