தொழில் முனைவோருக்கான
கருத்தரங்கு-ஜிம் பீச் உரையாடல்
அமெரிக்காவில் புதிய தொழில் முனைவோரை திறமை மிக்கவர்களாக
ஆக்கும் நோக்கில் ஸ்கூல் ஃபார் ஸ்டார்ட் அப்ஸ் என்ற பயிற்சி நிறுவனத்தை துவக்கி இருக்கிறார்கள்
. இதன் நிறுவனர் மற்றும் துறைத் தலைவர் ஜிம் பீச்.
தொழில் முனைவோருக்கான
பயிற்சி கருத்தரங்கில் ஜிம் பீச் எழுப்பிய கேள்வி இது:
ஒரு தொழில் முனைவோருக்கான அத்தியாவசிய தேவையான மூன்று
பண்புகள் என்னென்ன?
1.படைப்பாற்றல்
2.இடர்களை எதிர்கொள்ளும்
துணிச்சல்,
3.எப்படியும் வெற்றி
பெற வேண்டும் என்கிற வெறி ,
சரி தானா? என கேட்டு
நிறுத்துகிறார்.
பயிற்சிக்கு வந்தவர்கள்
ஆமாம்,ஆமாம்... மிக மிகச் சரி என்று குரல் கொடுக்கிறார்கள். ஜிம் பீச் இல்லவே இல்லை
என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்.மேலும்,நீங்கள் அனைவரும் கூறுவது நூற்றுக்கு
நூறு தவறான கருத்து என்று கூறிய போது, அனைவரும் திகைத்துப் போகிறார்கள் .
ஜிம் பீச் மேலும்
தொடர்கிறார்.உங்கள் இருக்கையில் வசதியாக சாய்ந்து கொண்டு ஏதாவது ஒரு பெரிய யோசனை உதிக்கும்
என்று எதிர்பார்த்து கொண்டு இருக்காதீர்கள்.வேறு யாராவது ஒரு நல்ல யோசனை வைத்து கொண்டு
இருக்கக் கூடும்.அத்தகைய யோசனையைக் கண்டுபிடியுங்கள்,தவறு செய்கிறோம் என்கிற குற்ற
உணர்ச்சி கூடத்தேவையில்லை. அந்த யோசனையை திருடி
உங்களுடையதாக ஆக்கி கொண்டாலும் தவறில்லை என்பேன். அந்த யோசனையை மேலும்
செம்மைப்படுத்துவதில்
தான் உங்கள் திறமை அடங்கி இருக்கிறது.நான் அப்படி தான் செய்தேன்,வெற்றி பெற்றேன் என்கிறார்.
நீங்கள் இடர்களை எதிர் கொள்ள வேண்டிய தேவையே
இருக்காது.இடர்களை குறித்து கவலைப்படுவது முட்டாள்தனம்.எத்தனையோ பேர் பணத்தை மூட்டை
கட்டி வைத்து கொண்டு, எந்த தொழிலில் முதலீடு செய்யலாம் என்று காத்துகொண்டு இருக்கிறார்கள்.உங்களுக்காக
அவர்களே இடர்களை எதிர் கொள்ள தயாராக இருக்கும்
போது ,நீங்கள் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்?.
அப்புறம் அந்த வெறி வேண்டாம்.அது உங்கள் குடும்பத்தை
முன்னேற்றுவதற்காக ஆனதாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்,போதும்.
தொழில் முனைவு
என்பது என்ன தெரியுமா?
உங்களுக்கு ஏதாவது சிக்கல் இருக்கிறதா? என்னிடம்
விடுங்கள் .நான் அதை தீர்த்து வைக்கிறேன் என்று போய் நிற்பதுதான்.
ஒரு மின் ஏணியில் இறங்கி கொண்டு இருக்கிறீர்கள்.அது
தரை தளத்தை அடைவதற்குள் உங்கள் மூளைக்குள் ஒரு கேள்வி பளிச்சிட வேண்டும்.வெளியில் காலை
எடுத்து வைக்கும் முன் அதற்கான தீர்வை யோசித்துவிட
வேண்டும்.இது தான் உங்களுக்கு சரியான வாய்ப்பு என்கிறார் ஜிம் பீச்.
மேலும் தகவல்களுக்கு http://eigthbrain.blogspot.in/
மேலும் தகவல்களுக்கு http://eigthbrain.blogspot.in/
---நன்றி,வளர்தொழில்,நித்யா
கணேசன்,திண்டுக்கல்
No comments:
Post a Comment