Sunday, 27 March 2016

Angry Vaiko walks out of PolimarTV interview

டென்சனுடன் பேட்டியை கேன்சல் செய்த வைகோ

ம.ந.கூ-க்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா? டென்சனுடன் பேட்டியை கேன்சல் செய்த வைகோ- வைரலாகும் வீடியோ

சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா? என்ற பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் கேட்ட கேள்வியால் மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் டென்சனாகி பேட்டியை பாதியில் முடித்து காலர் மைக்கை கழற்றி போட்டுவிட்டு வெளியேறி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தேமுதிகவுக்கு திமுக ரூ500 கோடியும் 80 தொகுதிகளும் கொடுப்பதாக பேரம் பேசியது என வைகோ கூறியிருந்தார். இது தேர்தல் களத்தை படுசூடாக்கியிருக்கிறது.


வைகோவுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதை நான் சட்டப்படி சந்திப்பேன் என வைகோவும் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து முதலில் கருத்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, வைகோவிடம் விளக்கம் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் நேற்று இரவு நெல்லை பொதுக் கூட்டத்தில் வைகோவுக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸை திமுக திரும்ப பெற வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்சி அதிக அளவில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் பாலிமர் நியூஸ் சேனலின் 'மக்களுக்காக' நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.எல். கண்ணன் வைகோவிடம், திமுக தரப்பில் ரூ500 கோடி கொடுக்க முன்வந்தார்கள்...80 இடங்கள் கொடுக்க முன்வந்தார்கள் என்கிறது உங்களது குற்றச்சாட்டு. அதுமட்டுமல்ல அதிமுகவின் பி டீமாக செயல்படுகிற திரு வைகோ அவர்கள் தலைமையில் இயங்குகிற அந்த அமைப்புக்கு ரூ1,500 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வியை சொல்லி முடிக்கவில்லை. ஆனால் வைகோ சட்டென எழுந்து, "நான் இந்த இண்டர்வியூவை இத்தோட கேன்சல் பண்ணுகிறேன்" என சொல்லிவிட்டு காலர் மைக்கை கழற்றி கீழே போடுகிறார்... அப்போதும் ஏ.எல். கண்ணன், சார்... நான் சொல்ல வர்றதை கேளுங்க... அடுத்து என்ன வார்த்தையை சொல்லப் போறேன் என சொல்ல அதை நிராகரித்தபடியே வைகோ அறை கதவை திறந்து டென்சனுடன் வெளியேறுகிறார். இந்த வீடியோ காட்சிதான் பரபரவென வைரலாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு மக்களுக்காக என்ற நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களின் பேட்டிகள் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சிக்காக வைகோவிடம் பேட்டி எடுக்கப்பட்ட போதுதான் இந்த சம்பவம் நடந்ததாக பாலிமர் நியூஸ் சேனல் வட்டாரங்கள் தெரிவித்தன.

வீடியோவினை பார்க்க கீழுள்ள வலைதளத்தை சொடுக்கவும்
http://tamil.oneindia.com/news/tamilnadu/vidoe-vaiko-goes-on-viral-249840.html
Courtesy:http://tamil.oneindia.com

No comments:

Deoghar: Politics of Short-cut Leads to Short-circuit, Says PM Modi in Jibe at Opposition

  Taking a swipe at opposition parties, Prime Minister  Narendra Modi  on Tuesday cautioned against taking “short-cut” politics based on pop...